கருக்கா வினோத் வழக்கில் என்ஐஏ மனு தள்ளுபடி.!! - Seithipunal
Seithipunal


ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்தை காவல் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த மனுவை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பிரபல ரவுடி கருக்கா வினோத் கடந்த ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் மீது ஆயுத தடுப்பு சட்டம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்தின் வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய் அமைப்பின் மனு தாக்கல் செய்திருந்தது.
தேசியப்பனாய்வு அமைப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA plea dismissed in Karukka Vinoth case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->