டெல்லி மக்கள் தீர்ப்பு 2025: கேஜரிவால், அதிஷி, சிசோடியா பெரும் பின்னடைவு! கோட்டையை பிடிக்கும் பாஜக!
Delhi Election Result AAP
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் முதல்வர் அதிஷி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
70 தொகுதிகளுக்கான டெல்லி சட்டப்பேரவைத்தேர்தல் பிப்ரவரி 5 அன்று நடைபெற்றது, இதில் 60.54% வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
12.40 மணி நிலவரப்படி, இந்திய தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, பாஜக 48 இடங்களில், ஆம் ஆத்மி 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. முதல் 2 சுற்றுகளில் பட்லி தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தாலும், தற்போது அதிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், புதுடெல்லி தொகுதியில் கேஜரிவால் 1800 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். இதேபோல் கல்காஜி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் அதிஷி 239 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார்.
ஜங்புரா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 579 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.
English Summary
Delhi Election Result AAP