59 வயது போலீசாருக்கு இரவு பணியிலிருந்து விலக்கு - காரணம் என்ன?
night duty cancelled to 59 years old police in chennai
சென்னை காவல்துறையில் இரவு ரோந்து பணிக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணியில், 59 வயதுடைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வயது மூப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இரவு ரோந்து பணியில் இருந்து ஆணையர் அருண் விலக்களித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்து இருப்பதாவது:- "சென்னை காவல் துறையில் ஓராண்டு காலத்திற்குள் பணி ஓய்வுபெற உள்ள 59 வயது நிரம்பிய போலீசாரின் வயது மூப்பையும், தங்களது நீண்ட பணிகாலத்தில் அவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய மக்கள் பணியையும், கடின உழைப்பையும் கருத்தில் கொண்டு, அனைத்து போலீசாருக்கும் இரவு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக வரும் காலங்களில் 59 வயதை எட்டும் போலீசார் அனைவருக்கும், அவர்கள் பணி ஓய்வுபெறும் நாள் வரை ஓராண்டு காலத்துக்கு இரவு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
night duty cancelled to 59 years old police in chennai