மக்களே உஷார் பரவும் நிபா வைரஸ்! தமிழ்நாடு-கேரளா எல்லையில் தீவிர வாகனசோதனை! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக கேரளா எல்லை பகுதிகளில் தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்த பிறகு தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து அந்த பகுதியில் சுகாதாரத்துறை என முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிபா வைரஸ் தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை கேரளா அரசு தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவுக்கு வரும் அண்டை மாநிலங்களில்  சோதனை சாவடியில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அந்த சோதனை சாவடி இல் அவ்வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்த பின்னரே தமிழ்நாட்டிற்கு எல்லைக்குள் அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கேரளாவிலிருந்து பல்வேறு பழ வகைகளை ஏற்றுக்கொண்டு வரும் வாகனங்களை இறக்கி சோதனை செய்து அதிகாரிகள் மேலும் சுகாதாரத் துறையின் சோதனைக்கு அனுப்பி வைத்ததாக தகவல் கூறப்பட்டுள்ளது.

அந்த பழங்களில் வவ்வால்கள் கடித்து சேதமாகி இருந்தால் அதனை அப்படியே வாகனத்தில் கேரளாவுக்கு மீண்டும் திருப்பி அனுப்பும் வழியில் சுகாதாரத்துறை என ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் கேரளா எல்லை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nipah virus Intensive vehicle testing on the Tamilnadu Kerala border


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->