திமுக உறுப்பினர் போல் செயல்பட்டால் இப்படித்தான்.. டி.ஜிபிக்கு பாடம் எடுத்த அதிமுக நிர்வாகி..!!
Nirmal Kumar criticizes DGP explanation on counterfeit liquor
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் இல்லை என்றும் அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த செய்தி குறிப்பில் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்பாக கைப்பற்றப்பட்ட சாராயம் தடவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
அந்த ஆய்வறிக்கையில் மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல என்பதும், ஆலையில் பயன்படுத்தப்படும் எத்தனால் என்ற விஷச்சாராயம் என்பதும் தெரியவந்தது. தொழிற்சாலைகளில் இருந்து விஷச்சாராயத்தை திருடி சிலர் விற்று உள்ளனர்.
இதன் காரணமாக இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. எந்த தொழிற்சாலையில் இருந்து மெத்தனால் என்ற விஷச்சாராயம் வந்தது, அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என புலனாய்வு விசாரணை நடந்து வருகிறது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்திருந்தார்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவின் இத்தகைய விளக்கத்திற்கு அதிமுக நிர்வாகி சி.டி.ஆர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "மெத்தனால் (CH3OH) இன்னொரு பெயர் மரச்சாராயம். காலம் காலமாக மெத்தனால் கடத்தப்படுவதே சாராயம் தயாரிக்கத்தான் என்பது கூட டிஜிபிக்கு தெரியாதா? DGP திமுக உறுப்பினர் போல் செயல்பட்டால் இப்படித்தான் அறிக்கை விட தோணும் போல" என தமிழக கட்சிக்கு சைலேந்திரபாபுவை கலாய்த்துள்ளார்.
English Summary
Nirmal Kumar criticizes DGP explanation on counterfeit liquor