சென்னை டூ பெங்களூர்.. ஜனவரி முதல் 2 மணி நேரம் தான்! நிதின் கட்காரி கொடுத்த அப்டேட்! - Seithipunal
Seithipunal


வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சென்னையில் இருந்து பெங்களூர் வரை அமைக்கப்பட்டுள்ள பசுமை வழி அதிவிரைவு சாலை செயல்பாட்டுக்கு வரும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இதனை தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் சென்னையிலிருந்து டெல்லி வரை சாலை வழியாக இணைக்கும் வகையில் பசுமை வழி அதிவிரைவு சாலை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் பசுமை வழி அதிவிரைவு சாலை பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதன் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு இரண்டு மணி நேரத்தில் பயணம் மேற்கொள்ளலாம். இதே போன்று நாட்டில் 36 பசுமை வழி அதிவிரைவு சாலைகளை அமைத்திருக்கிறோம்" மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NitinGadkari announced Chennai to Bangalore expressway operational from Jan2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->