அரசியல் செய்யத்தான் அரசியல் கட்சி! தமிழக அரசுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!
NLC issue Chennai HC case details
கடலூர் மாவட்டம், மேல் வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நெல் பயிர்கள் விளைந்த நிலத்தில், புல்டோசர் உள்ளிட்ட கனரக வாகனங்களை இறக்கி, கால்வாய் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கியது.
இதற்கு விவசாயிகளும், பொதுமக்களும், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து, என்எல்சி நிர்வாகத்திற்கும், மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர்m சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந்தார்.
மேலும், இந்த வழக்கை அவசர வழக்கமாக விசாரிக்க கோரி, பாமக வழக்கறிஞர் பாலு கோரிக்கை விடுத்தந்தார். அதன்படி இந்த வழக்கை இன்றே விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரம் பெரிய போராட்டமாக மாறுவதற்கு அரசியல் கட்சியினரின் தூண்டுதல் தான் காரணம் என்றும், ஒரு பகுதியில் நிலத்திற்கு இழப்பீடு பெரும் மனுதாரர் மற்றொரு பகுதியில் திட்டத்தை எதிர்க்கிறார் என்று வாதம் வைக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் அவர்கள், "அரசியல் செய்வதற்காக தான் அரசியல் கட்சிகள் உள்ளன. கட்சிகளை அரசியல் செய்ய வேண்டாம் என கூறுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
போராட்டம் நடந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், அதனை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை" என்றார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், என்எல்சியில் நிலம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்காமல் வடமாநிலத்தவர்க்கு பணி வழங்கப்படுவதாக வாதம் வைக்கப்பட்டது.
அதற்க்கு நீதிபதி அவர்கள், நாட்டை பிரித்து பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. வட மாநிலத்தவர், தென் மாநிலத்தவர் என பிரிக்காதீர்கள். பிரிக்க வேண்டாம்.
தென் மாநிலம், வடமாநிலம் என நாட்டை பிரித்துப் பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. நம் மாநிலத்தை சேர்ந்தவர்களும், வெளி மாநிலங்களுக்கு சென்று பிரகாசித்து வருகிறார்கள் என்று, நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் கருத்து தெரிவித்தார்.
மேலும், பயிர்களை பயிர்களில் பொக்லைன் விட்டு அழித்துவிட்டு, இப்போது பயிர்களே இல்லை என்று சொல்வீர்களா? உங்கள் நிலத்திற்கு வேலி அமைக்கும் பணியை முறையாக செய்யாமல், பிரச்சனையை உருவாக்கி உள்ளீர்கள் என்று என்எல்சி நிறுவனத்தை பார்த்து நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
அணைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை நாளை மறுநாள் ஒத்தி வைப்பதாகவும், அதற்குள்ளாக என்எல்சி நிறுவனம், தமிழக அரசும் இதுவரையில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள், சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு எவ்வளவு தர உள்ளீர்கள் என்ற விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டார்.
English Summary
NLC issue Chennai HC case details