என்.எல்.சி ஒபிசி பணியாளர் நலசங்கம் நடத்திய மருத்துவ முகாம்..ஏராளமானோர் பயன்பெற்றனர்!  - Seithipunal
Seithipunal


என்.எல்.சி ஒபிசி பணியாளர் நலசங்கம் சார்பில்  இலவச பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை  என்.எல்.சி  சேர்மன் பிரசன்னகுமார் மொட்டுப்பள்ளி துவக்கி வைத்தார். 

 கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 18-ல் என்.எல்.சி ஒபிசி பணியாளர் சங்கம் மற்றும் குலோபல் மருத்துவமனை சார்பில் இலவச பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.ஒபிசி பொதுச்செயலாளர் அழகுராஜ் வரவேற்புரை நிகழ்த்த ஒபிசி தலைவர் கணேசன் தலைமையில் இந்த முகாம் நடைபெற்றதில்,

என்.எல்.சி இந்தியா சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுபள்ளி அவர்கள் இலவச பன்னோக்கு உயர் சிறப்பு பரிசோதனை மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.இதில் சிறப்பு விருந்தினர்கள் மனிதவள இயக்குனர் சமீர் ஸ்வரூப் மற்றும் செயல் இயக்குனர் நாராயணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் நரம்பியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், சிறுநீரகவியல் மருத்துவம், இருதய மருத்துவம், இரப்பை மருத்துவம் ஆகியவற்றிற்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கபட்டது.மேலும் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, இசிஜி, டிஜிட்டல் பயோதெசியோமீட்டர் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டன.

மேலும் ஒபிசி பொருளாளர் தமிழரசன் அலுவலக செயலாளர் கார்த்திகேயன் மற்றும் துணை தலைவர், பகுதி செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் என்.எல்.சி சார்ந்த பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NLC OBC Employees Welfare Association conducted a medical campA lot of people benefited


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->