கடலூரில் தொடரும் பதற்றம்.!! 4 வது நாள் பணியில் என்எல்சி.!! போலீசார் குவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலி அமைந்துள்ள என்எல்சி நிறுவனம் தனது இரண்டாம் கட்ட நிலக்கரி சுரங்க பணிக்காக வளையமாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் சுமார் 25,000 ஹெக்டருக்கு மேல் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை அழித்து விவசாயம் நிலங்களுக்கு நடுவே கால்வாய் அமைக்கும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகைப் போராட்டத்தின் போது பாமகவினர் மீது காவல்துறை தடியடி நடத்தியதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக கடலூர் மாவட்டத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் சுமார் 2000 க்கும் மேற்பட்ட போலீசார் கடலூர் மாவட்டத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வளையமாதேவி கிராமத்தில் 4 வது நாளாக கால்வாய் அமைக்கும் பணிகளை என்எல்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதனை மீறி கால்வாய் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

தற்போது வளையமாதேவியில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் கால்வாய் வெட்டும் பணி நிறைவடைந்ததால், அடுத்தக்கட்ட பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியதால் விவசாயிகள் வேதனையுடன் கண்ணீர் வடிக்கின்றனர். என்எல்சி நிர்வாகம் கால்வாய் வெட்டும் பணியை நிறுத்தாவிட்டால் போராட்டம் தொடரும் என பாமக அறிவித்துள்ளதால் கடலூர் மாவட்டம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nlc started 4th day operations with police protection


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->