போலி பேராசிரியர்கள் முறைகேடு! பொறியியல் கல்லூரிகள் மீது கருணை காட்டக்கூடாது - ஆளுநர் ஆர்.என்.ரவி! - Seithipunal
Seithipunal


போலி பேராசிரியர்கள் முறைகேட்டில் ஈடுபட்ட பொறியியல் கல்லூரிகள் மீது கருணை காட்டக்கூடாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

அங்கீகாரம் பெறுவதற்காக 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பல்வேறு கல்லூரிகளில் பணிபுரிந்து வருவதாக அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியது. அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது.

அதனையடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி  அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக பேராசிரியர்களை பணி நிமித்தமாக போலி கணக்கு காட்டி முறைகேடு செய்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கையாக அண்ணா பல்கலைகழகம் தர வேண்டும் என ஆளுநர் ரவி நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் 224 பொறியல் கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்ப பெறலாமா? முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகளுக்கு கருணை காட்டக் கூடாது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலும் இதில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No mercy should be shown to engineering colleges involved in fake professor malpractice Governor RN Ravi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->