" நோட்டாக்கு போடாதீங்க ஓட்டு "..சத்குரு வேண்டுகோள்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நாளை மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு  ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு எக்ஸ் தளத்தில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பதிவில் சத்குரு கூறியதாவது, 18 வயதில் நிரம்பிய ஒவ்வொரு வாக்காளர்களும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். இந்தியாவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு யார் ஆட்சிசெய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை நம் கையில் உள்ளது.

வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளர்களின் ஜனநாயக உரிமை. நோட்டாக்கு வாக்களித்து வாக்கை வீணடிக்காதீர்கள். நோட்டாவை தேர்ந்தெடுத்து வாக்குகின் மதிப்பை குறைக்காதீர்கள்.பாரதத்தையும் பாரத நாட்டில் வசிக்கும் 100 கோடி மக்களின் எதிர்காலத்தை நினைவு கூர்ந்து  வாக்களியுங்கள் என்று சத்குரு கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No vote for nota Satguru requestrequest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->