BREAKING : தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு..குடிமைப் பொருள் வழங்கல் மேலாளர் பணியிடை நீக்கம்.!
Non standard pongal package senior Officer Suspended
தரமற்ற பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாடு மேலாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான தமிழக அரசு 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்த குப்பை குடும்ப அட்டைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இதில் தரமற்ற பரிசுப்பொருட்கள் கொடுக்கப்பட்டதாலும், 21 பொருட்களுக்கு பதிலாக 16 மற்றும் 15 பொருட்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் கடந்த சில நாட்களாகவே புகார்கள் எழுந்தது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் தரமற்ற பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கியதாக புகார்கள் எழுந்த நிலையில், தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாடு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
English Summary
Non standard pongal package senior Officer Suspended