#கிருஷ்ணகிரி:: விநாயகர் சிலை திருடிய வட மாநிலத்தவர்கள் கைது..!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கேகே நகரில் உள்ள விநாயகர் கோவிலில் தர்மகர்த்தாவாக ராதம்மா என்பவர் இருந்து வருகிறார். இவர் காலையில் பக்தர்களுக்காக கோவிலை திறந்து வைத்து விட்டு தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் மதியம் 12 மணியளவில் கோயிலுக்கு வந்து பார்த்த பொழுது அங்கிருந்த 20 கிலோ எடையுள்ள வெண்கலத்தாலான விநாயகர் சிலை மாயமாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சூளகிரி காவல் நிலையத்திற்கு அவர் தகவல் அளித்ததின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதேபோன்று கோவில் அருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது மர்ம நபர்கள் இருவர் கோவிலில் இருந்து பிளாஸ்டிக் பையை உடன் வெளியே வரும் காட்சி பதிவாகி இருந்தது.

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் ஓசூரில் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்கள் இருவர் கோவிலை நோட்டமிட்டு விநாயகர் சிலையை திருடி சென்றது தெரியவந்தது. வட மாநில தொழிலாளிகள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து விநாயகர் சிலையை பறிமுதல் செய்தனர். அவர்கள் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்த கையும் , நையம் ஆகியயோர் என்பது தெரியவந்தது.  இதனை அடுத்து கைதான இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Indians arrested for stealing Ganesha statue in krishnagiri


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->