விழுப்புரம் ரயில் நிலையத்தில் குடும்பம் நடத்தும் வட மாநிலத்தவர்கள்..!! அடுத்த வாரம் 500 பேமிலி வருதாம்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநிலத்தில் ஹவுராவிலிருந்து புதுச்சேரிக்கு வாரம் ஒரு முறை அரவிந்தோ சூப்பர் பாஸ்ட் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மூலம் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக தமிழகம் நோக்கி வர தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை விழுப்புரம் சந்திப்பு ரயில் நிலையத்தில் வட மாநிலத்தவர்கள் குடும்பம் குடும்பமாக உடைமைகளுடன் வந்து இறங்கினர்.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய அவர்கள் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறாமல் ரயில் நிலையத்தையே தங்கும் இடமாக மாற்றிக் கொண்டனர். ரயில் பெட்டிகளில் உள்ள கழிவறைகளுக்கு நீர் நிரப்பும் பெரிய அளவிலான குழாய்களைத் திறந்து பட்டப் பகலில் பல பேர் முன்னிலையில் அருவியில் குளிப்பது போல் அரை நிர்வாண கோலத்தில் குளித்து மகிழ்கின்றனர். குளிப்பது மட்டுமில்லாமல் தங்களது துணிகளை துவைத்து ரயில் நிலையத்தில் கயிறு கட்டி காய போட்டுள்ளனர்.

இதனைக் கண்ட இரயில் பயணிகள் வியப்பில் ஆழ்ந்தனர். ரயில் நிலைய அதிகாரிகள் அவர்களின் செயல்களை கண்டு கொள்வதில்லை என கூறப்படுகிறது. தமிழகத்தில் அன்றாட வேலைக்கு தினக்கூலி நிறைய கிடைப்பதாகவும் தொடர்ந்து வேலைகள் இருப்பதால் வடமாநிலத்தவர்கள் தமிழக நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். அடுத்த வாரம் மேலும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமிழகம் வரவிருப்பதாக வட மாநிலத்தவர்கள் தெரிவித்துள்ளனர். ரயில் நிலையத்தில் வட மாநிலத்தவர்கள் குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Indians bathing in villupuram railway station video has gone viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->