கிருஷ்ணகிரியில் உயிரிழந்த வடமாநில இளைஞர் - 2 நாட்களுக்கு பிறகு வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாரூர் அருகே உள்ள அனுமன்கோவில்பள்ளம் பகுதியில் நார் மில் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மில்லை நடத்தி வரும் கமலேசன் என்பவர் கடந்த 14.03.2024 அன்று பாரூர் காவல் நிலையத்தில், தனது தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞர் ஒருவர் மில்லில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டார். ஆகவே, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தாருங்கள் என்று மனு அளித்துள்ளார்.

அதன் பேரில், பாரூர் காவல் ஆய்வாளர் சிவசங்கர் தலைமையில் காவலர்கள் நார் மில்லுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் முன்னுக்குப்பின் முரனாக பதில் அளித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இறந்துபோன வடமாநில இளைஞர் அங்கு பணிபுரியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், பெங்களூருவில் உள்ள கமலேசனின் சகோதரர் வெங்கடேசன் என்பவர், புதியதாக தொடங்கிய நார்மில்லில் கடந்த 13.03.2024 அன்று பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞர் எதிர்பாராத விதமாக இறந்துள்ளார். புதிய நிறுவனம் என்பதால் அங்கு இன்சூரன்ஸ் கிளைம் செய்ய முடியாது என நினைத்து, இங்கு அவரை கொண்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் மில்லின் உரிமையாளர்களிடம் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநில இளைஞர் ஒருவர் நார்மில்லில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

north state youth died in krishnagiri


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->