#சென்னை:: வடமாநில ஹெல்மெட் வியாபாரி மண்டையில் வெட்டிய போதை இளைஞர்கள்..!! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் சிங் என்பவர் திருமுல்லைவாயல் சி.டி.எச் சாலை ஓரத்தில் ஹெல்மெட் கடை நடத்தி வருகிறார். இன்று பிற்பகல் கஞ்சா போதையில் டியோ வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ராஜ்குமாரிடம் ஹெல்மெட் வாங்குவதை போல் நடித்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த ஹெல்மெட்டை எடுத்து தலையில் மாட்டிக் கொண்டு பணம் தராமல் அங்கிருந்து புறப்பட முயற்சி செய்து உள்ளனர்.

அப்பொழுது எடுத்த ஹெல்மெட்டிற்கு பணம் கொடுக்கும்படி ராஜ்குமார் கேட்டுள்ளார். அதற்கு கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் "எங்க வந்து யார்கிட்ட பணம் கேட்கிறாய். நீ வேண்டுமானால் எனக்கு மாமுல் கொடு" என கூறி மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து ராஜ்குமார் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து டியோ வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ராஜ்குமார் உடனடியாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜ்குமாரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் கஞ்சா போதையில் தாக்கிய இரு இளைஞர்களை தேடி வந்த நிலையில் இருவரும் ஆவடியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் ஆவடி பகுதியை சேர்ந்த டாட்டூ சதீஷ் மற்றும் ராகேஷ் என்பது தெரியவந்துள்ளது. இருவரும் அதீத கஞ்சா போதையில் இருப்பதால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்த முடியாமல் திணறினர். இளைஞர்கள் பட்டாகத்தியுடன் வலம் வந்து ஒருவரை அறிவாளால் வெட்டிய சம்பவம் திருமுல்லைவாயல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Northern helmet sealer skull cut by drug youths


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->