மருத்துவ சிகிச்சையின் போது உயிரிழப்பு ஏற்பட்டால் மருத்துவரைக் கைது செய்ய தடை - அதிரடி உத்தரவிட்ட டிஜிபி.!
not arrest of doctor in case of patient died DGP sylendra babu order
மருத்துவ சிகிச்சையின் போது உயிரிழப்பு ஏற்பட்டால் மருத்துவரைக் கைது செய்ய தடை - அதிரடி உத்தரவிட்ட டிஜிபி.!
தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு மருத்துவ சிகிச்சையின் போது நோயாளி உயிரிழந்தால் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் வழக்கமான நடைமுறைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “சிகிச்சையின் போது நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால் அது மருத்துவரின் கவனக்குறைவு அல்லது அலட்சியத்தின் காரணமாக ஏற்பட்டது என்றும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரை குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்தில் அளிக்கும் போது காவல் நிலைய அதிகாரி மாண்புமிகு உச்சநீதிமன்றம் மற்றும் மாண்புமிகு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
விசாரணை அதிகாரி வழக்குப்பதிவு செய்யும் முன்பு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:-
* முழுமையான விசாரணை நடத்தி அனைத்து விதமான வாய்மொழி மற்றும் ஆவண ஆதாரங்களை திரட்ட வேண்டும்.
* மூத்த அரசு மருத்துவரிடம் குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரிடமிருந்து வல்லுநர் கருத்து (Expert Opinion) பெற வேண்டும்.
* இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304 (A)இன் கீழ் குற்ற செயல் உறுதி செய்யப்பட்டால், மேல் நடவடிக்கைக்கு முன் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் சட்ட ஆலோசனை பெற வேண்டும்.
* சிகிச்சையின் போது அலட்சியமாக நடந்து கொண்டதாக ஒரு மருத்துவரின் மீது குற்றம் சாட்டப்பட்டால் மற்ற வழக்குகளைப் போல் கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
* வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக வழக்கில் தொடர்புடைய அனைத்து சாட்சிகளையும் சம்பந்தப்பட்ட மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
* வழக்கின் விவரங்கள், ஆதாரங்கள். சாட்சியங்கள் மற்றும் குற்றம் நடைபெற்ற சூழ்நிலை ஆகியவை தொடர்பான விரைவு அறிக்கையை (Express Report) காவல்துறை தலைமை இயக்குனருக்கு வழக்கு பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அனுப்பப்பட வேண்டும்” என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
not arrest of doctor in case of patient died DGP sylendra babu order