மீனவர்கள் ரெயில் மறியல் போராட்டம் அறிவிப்பு!...எப்போது?...எங்கே? - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தங்கச்சிமடத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில், மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள், இலங்கை சிறையில் உள்ள  மீனவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

அப்போது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அவை பின்வருமாறு,

*இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்த அனைத்து மீனவர்களையும், ஏற்கனவே அபராதம், தண்டனை விதித்து சிறையில் அடைத்துள்ள மீனவர்களையும் எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*இலங்கை கடற்படை பறிமுதல் செய்த அனைத்து படகுகளையும் மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்க இயலாத படகுகளுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

*மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இருநாட்டு மீனவர்கள் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

*மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Notice of fishermen rail picket strike when where


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->