காலாவதியான தந்தை பெரியார் கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரம் - விளக்கம் கேட்டு 21 பேருக்கு நோட்டீஸ்.!! - Seithipunal
Seithipunal


காலாவதியான தந்தை பெரியார் கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரம் - விளக்கம் கேட்டு 21 பேருக்கு நோட்டீஸ்.!!

திருச்சியில் செயல்பட்டு வரும் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடந்த 1998-99-ம் ஆண்டில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவிடமிருந்து தன்னாட்சி அங்கீகாரம் பெற்றது. இந்த அங்கீகாரத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

அந்த வகையில், இந்தக் கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரம் கடந்த 2021 ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்துள்ளது. இந்த அதிகாரம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே புதுப்பித்திருக்க வேண்டும். ஆனால், கல்லூரி நிர்வாகம் விண்ணப்பிக்க தவறியதால், தன்னாட்சி அங்கீகாரம் காலாவதியானது.

இதையடுத்து, கல்லூரி நிர்வாகம் சார்பில் உயர் கல்வித் துறை மூலம் மீண்டும் தன்னாட்சி அங்கீகாரத்தை வழங்கக் கோரி யுஜிசிக்கு விண்ணப்பிக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது.

இதற்கிடையே , தமிழக உயர் கல்வித் துறையின் உத்தரவின் பேரில், கல்லூரியின் அங்கீகாரத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று விளக்கம் கேட்டு, கடந்த 2021-ம் ஆண்டில் கல்லூரியில் பணியாற்றிய தேர்வு நெறியாளர், உதவி நெறியாளர் மற்றும் அங்கீகாரம் பெறுவதற்கான குழுவில் இடம் பெற்றிருந்த பேராசிரியர்கள் என மொத்தம் 21 பேருக்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில் இதற்கான விளக்கத்தை மூன்று நாட்களில் அளிக்க வேண்டும் எனவும், தினந்தோறும் மாலை 4 மணி வரை கல்லூரியில் இருந்து ‘நாக்’ அங்கீகாரம், தன்னாட்சி அங்கீகாரம் ஆகியவற்றுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Notice to 21 professers of thanthai periyaar college for expiration of autonomous recognition in trichy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->