நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு... ஆற்றங்கரையோரம் யாரும் செல்ல வேண்டாம்!
Noyal river heavy floods
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதை தொடர்ந்து கோவை, திருப்பூர் வழியாக வரும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் தேதி காலை நிலவரம் படி அணையில் தண்ணீர் தேக்கம் இல்லை. அப்போது வினாடிக்கு 59 கன அடி தண்ணீர் மட்டுமே நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருவதால் நிழல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது.
நேற்று காலை அணையில் 9 அடி தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் வினாடிக்கு 393 கன அடி தண்ணீர் நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து 259 கன அடி தண்ணீர் நிய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் ஒரு சில நாட்களில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஆற்றில் ஒரு சில நாட்களில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஆற்றங்கரையோரம் யாரும் செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.