யாருடன் கூட்டணி வைக்கலாம்? - செய்தியாளர்களிடம் கேள்வி கேட்ட சீமான்.!!
ntk leader seeman ask question to reporters for aliance
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போது முதலே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், தே.மு.தி.க. , வி.சி.க., ம.தி.மு.க., பா.ம.க., த.வெ.க. நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் தரப்பில் இருந்து கூட்டணி குறித்து கேர்ள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான் நாங்கள் யாருடன் கூட்டணி வைக்கலாம்? என்று செய்தியாளரிடமே திருப்பிக்கேட்டார்.

அதற்கு செய்தியாளர், நமது மனதிற்கு ஏற்றவர்களோடு கூட்டணி வைக்கலாம் என்று பதில் அளித்தார். உடனே சீமான், எங்கள் மனதிற்கு ஏற்கவில்லை. அதுதான் பிரச்சினை. மதுவை ஒழிக்க வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். இந்த கட்சியும் மது ஆலை வைத்துள்ளது, அந்த கட்சியும் மது ஆலை வைத்துள்ளது.
ஊழல், லஞ்சத்தை ஒழிக்க நினைக்கிறோம். எந்த கட்சியுடன் சேர்ந்து ஒழிக்கலாம். ஊழல், லஞ்சம் இல்லாத நேர்மையான நிர்வாகத்தை எந்த கூட்டணியில் சேர்ந்து கொடுக்கலாம்?ஆறு, ஏரி, மலை, மணல், காடு இவற்றை காப்பாற்ற நினைக்கிறோம்.
அள்ளி சாப்பிடும் நபர்களே அதிகாரத்தில் உள்ள நபர்களாக உள்ளனர். எந்த கூட்டணியுடன் சேர்ந்து நிற்கலாம். நேர்மைக்கும், உண்மைக்கும் இருபக்கமும் பஞ்சம். அதனால் நாங்கள் மக்களுடனே தஞ்சம். கூட்டணிக்கு நான் வரவில்லை' என்றுத் தெரிவித்தார்.
English Summary
ntk leader seeman ask question to reporters for aliance