அரசு பள்ளி முட்டைகளை அலேக்காக ஆட்டே போட்ட சத்துணவு அமைப்பாளர்!....இருவர் கைது!....நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில், துறையூர்-திருச்சி சாலையில் இயங்கி வரும் ஸ்ரீ ரத்னா ஓட்டலில் தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் முட்டைகள் மூலம், ஆம்லெட், ஆப் பாயில் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் படி,  துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நிஜாஸ்டின் ஜோ தலைமையிலான அதிகாரிகள் ஓட்டலை ஆய்வு செய்த போது, ஓட்டலின் சமையலறையில் தமிழக அரசின் 111 முட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் பேரில், துறையூர் போலீசார் ஓட்டல் உரிமையாளர் ரத்தினத்தை  கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ரத்தினம் மதுராபுரி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வரும் வசந்தகுமாரி என்பவரிடமிருந்து, முட்டைகளை குறைந்த விலைக்கு சட்டவிரோதமாக வாங்கி பயன்படுத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

பின்னர் வசந்தகுமாரியை கைது செய்த துறையூர் போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  வசந்தகுமாரியை திருச்சி மகளிர் சிறையிலும், ரத்தினத்தை துறையூர் கிளை சிறையிலும் போலீசார் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக சத்துணவு அமைப்பாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசித்து வரும் நிலையில், அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாயும் என எதிர் பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nutrition organizer who thief used government school eggs Two arrested What happened


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->