பள்ளி சீருடையில் மரத்தில் தொங்கிய இரு சிறுமிகளின் உடல்கள் - பெரும் அதிர்ச்சி சம்பவம்!
Odisha School girl Mystery death
ஒடிசாவில் பள்ளி சீருடையுடன் இரண்டு சிறுமிகள் இறந்து, மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மல்கன்கிரி மாவட்டத்தின் காட்டுப் பகுதியில், நேற்று இரண்டு சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கிடந்தன.
உயிரிழந்தவர்கள் எம்.வி 74 கிராமத்தைச் சேர்ந்த ஜோதி ஹல்தார் (வயது 13) மற்றும் எம்.வி 126 கிராமத்தைச் சேர்ந்த மந்திரா சோடி (வயது 13) என அடையாளம் காணப்பட்டனர்.
இருவரும் ஒரே பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் கடந்த வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்று உள்ளனர். பின்னர் வீடு திரும்பாததை தொடர்ந்து, பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில், அருகிலுள்ள காட்டில் உள்ளூர் மக்கள் மரத்தில் தொங்கிய நிலையில் உடல்களை கண்டடிந்து, காவல்துறைக்கு தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இது கொலை சம்பவமா அல்லது தற்கொலையா என்பதைக் கண்டறியும் நோக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Odisha School girl Mystery death