சைபர் குற்றங்களைத் தடுக்க புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது ஒடிசி நிறுவனம்!
Odyssey introduces new technology to prevent cyber crime
உலகிலேயேமுதல்முறையாக,சைபர்குற்றங்களைத்தடுக்கஉதவும்தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது, சென்னையைச் சேர்ந்த ஒடிசி டெக்னாலஜீஸ் நிறுவனம், இதுடிஜிட்டல் அரெஸ்ட், சைபர் ஃபிராட் போன்றவற்றை இனி எளிதாகக் கண்டறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த – பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகிய ஒடிசி டெக்னாலஜீஸ் லிமிடெட் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தகவல் பாதுகாப்பு சார்ந்த தயாரிப்புகள், சேவைகளில் நிபுணத்துவம் பெற்றது. இந்த நிறுவனம் இரண்டு மென்பொருள் தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது. ஸார்கீசைன் மெயில்
அத்துடன் 20 கோடி மின்னஞ்சல் பயனர்களுக்கும் 100 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட் போன் பயனர்களுக்கும் இது உதவக்கூடும்.கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒரு புதிய சொல் பிரபலமடைந்து பலரிடமும் அறிமுகமாகி நிலைபெற்றுள்ளது. இந்த சொல் ‘டிஜிட்டல் கைது,என்று அழைக்கப்படுகிறது. இது சட்டப்பூர்வமான ஒரு சொல் அல்ல என்றாலும், இது மக்கள் மனதில் உறுதியாக வேரூன்றிவிட்டது.
இந்த டிஜிட்டல் கைது மோசடிகள் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிற வகையான டிஜிட்டல் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அடையாளத் திருட்டுகள், டிஜிட்டல் பிளாக்மெயில், மிரட்டி பணம் பறித்தல், ரான்சம்வேர் தாக்குதல்கள் உள்ளிட்ட அனைத்தும் அதிகரித்து வருகின்றன.
இந்தப் புதிய தயாரிப்புகள் குறித்து ஒடிசி டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பி. ராபர்ட் ராஜா கூறுகையில், “இந்தப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் எதுவாக இருந்தாலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எதனாலும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதையே காட்டுகிறது. முக்கியமான நிதிப் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பு மென்பொருளை வழங்குவதில் பெற்றுள்ள அனுபவத்துடன், இந்தப் பிரச்சினைகளில் பெரும்பாலானவை ஒரே மூலக் காரணத்தால்தான் உருவாகின்றன என்பதை ஒடிசி கண்டறிந்தது. அது டிஜிட்டல் அடையாளம் சார்ந்து காணப்படும் சமச்சீரற்ற தன்மையே. தாக்குதல் யார்மீது தொடுக்கப்படுகிறது என்பதை ஹேக்கர்கள் நன்றாகவே அறிந்திருப்பார்கள், ஆனால் பாதிக்கப்பட்டவர்களோ துரதிர்ஷ்டவசமாக அறியாமையில் உள்ளனர். என்றார்.
English Summary
Odyssey introduces new technology to prevent cyber crime