தேர்வறையில் புத்தகத்தை பார்த்து எழுத வைத்த அதிகாரி - வலைத்தளங்களில் வைரலாகும் ஆடியோ.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு மையத்தில் கடந்த 20-ந் தேதி பொருளியல் தேர்வு நடைபெற்றுள்ளது. 

அப்போது இந்த தேர்வு மையத்தில் உள்ள ஒரு அறையில் சரியாக படிக்காத மாணவர்களை மையத்தின் முதன்மை அலுவலர் புத்தகத்தை பார்த்து எழுத அனுமதித்துள்ளார். இது தொடர்பாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 

அதில் "உதவியாளர் ஒருவர் தொலைபேசி அழைப்பில் தேர்வு மைய முதன்மை அலுவலரிடம் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுதுவதை நீங்கள் கண்டு கொள்ளவில்லை. இது எல்லாருக்கும் பிரச்சினை ஆகி விடும் என்று தெரிவித்துள்ளார். 

அதற்கு தேர்வு மைய முதன்மை அதிகாரி, மாணவர்களுக்கு பாடங்கள் தெரியாது. அதனால் அவர்கள் எழுதி தேர்ச்சி பெறட்டும் என்று விட்டு விட்டேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த விசாரணைக்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

officer allowed students look at the book and write in exam center audio viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->