ஆ.ராசாவின் காரை நடுவழியில் மடக்கிய பறக்கும் படை - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கீதா, சப் - இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அந்த வழியாக தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் காரில் வந்தனர். பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை செய்வதைக் கண்டு அவர்களின் கார்களை சாலையோரமாக நிறுத்தி, காரில் இருந்து இறங்கி தங்களது வாகனங்களையும் சோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து, அதிகாரிகள் கார்களுக்குள் சோதனை செய்தனர். சோதனை முடியும் வரை காரில் இருந்து இறங்கி நின்றிருந்த அவர்கள் பின்னர் அங்கிருந்து கிளம்பி ஊட்டிக்கு சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

officers check dmk candidate a raja car


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->