முழு கொள்ளளவை எட்டப்போகும் செம்பரம்பாக்கம் ஏரி - உபரிநீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரமடைந்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தென்தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என்றும் இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், ஏரிகள் உள்ளிட்டவை வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. 

ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில், தற்போது 22 அடி உயரம் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. நாளை காலைக்குள் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், உபரிநீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

officials discuss open water from sembarambakkam lake for water full


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->