6 வயது சிறுமியை பலாத்காரம் முதியவர்! போலீஸிடம் ஒப்படைக்காமல் தீர்ப்பு வழங்கிய ஜமாத்! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அடுத்துள்ள ஒரு காலணியில் 6 வயது சிறுமியை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பலாத்காரம் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறுமியை கற்பழித்த முதியவரை காவல் துறையிடம் ஒப்படைக்காமல் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு அழைத்துச் சென்று ஜமாத் உறுப்பினர்கள் தீர்ப்பு வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சமூக வலைதளம் பக்கமான எக்ஸ் தளத்தில் அன்பழகன் மன்னன் என்பவர் பதிவிட்டுள்ள பதிவில், உடனே நடவடிக்கை எடு. கன்னியாகுமரி  மாவட்டம் திருவிதாங்கோடு அடுத்துள்ள ஒரு காலணியில் 6 வயது இளம்பிள்ளையை 60 வயது மதிக்கத்தக்க நபரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.

இது வெளியே தெரிந்து விசயம் விஸ்வரூபம் எடுத்து திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத்திற்கு சென்றுள்ளது. திருவிதாங்கோடு  முஸ்லிம் ஜமாத்துடைய தலைவர் அன்வர் உசேன்,செயலாளர் டாக்டர் யூசுப் மற்றும் கமிட்டி இணைந்து தமிழகத்தில் முன்பு பல குக்கிராமங்களில் நடந்த நாட்டாமை தீர்ப்புபோல் இரவு 1.30 மணிக்கு தீர்ப்பு வழங்கி உள்ளார்கள்.

என்ன தீர்ப்பு என்றால் குற்றம் செய்யப்பட்ட குற்றவாளியை காவல் நிலையத்தில் ஒப்படைக்காமல் குற்றம் செய்த குற்றவாளியை ஜமாத் அலுவலகத்தில் தூணில் கட்டி வைத்து அவருடைய உறவுகளை அழைத்து பாதிக்கப்பட்ட குழந்தைக்கு குற்றவாளியின் காலணி வீட்டை 6 லட்சம் ரூபாய்க்கு இரவோடு இரவாக விற்று அதில் மூன்று லட்சத்தை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்று நாட்டாமை தீர்ப்பு செய்தது போல் ஒரு நாசக்கார தீர்ப்பை கூறி தமிழகத்திலும் இப்படி ஒரு தீர்ப்பா ? இந்த காலத்திலும் என்று மக்கள் வியக்கும் வண்ணம் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளார்கள்.

தமிழக அரசும், காவல்துறையும் உடனே விரைந்து நடவடிக்கைகள் எடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவும், குற்றவாளிக்கு தக்க தண்டனை கிடைக்கவும், அத்தோடு இதுபோன்ற தீர்ப்பை வழங்கிய ஜமாத் நிர்வாகிகளுக்கு தக்க தண்டனை கிடைக்கும் வண்ணம் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசும் காவல்துறையும் முன் வந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், சிறுமியை கற்பழித்து முதியவரின் மனைவி இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் முதியவரை எச் டி தண்டனை வழங்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man arrested for raping a 6 year old girl in Kanyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->