கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் பலி.!! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் அச்சலூர் அருகே கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு பெய்த கனமழையின் போது முதியவர் முனுசாமி என்பவர் வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டிருந்த போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உள்ளது.

இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பழைய கட்டிடங்களையும் பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man died wall collapsed due to heavy rain in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->