சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்த கார் - முதியவர் பலி, 4 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


பெருங்குடி அருகே சாலை தடுப்பில் கார் மோதி கவிழ்ந்த விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சென்னை தரமணி பகுதியை சேர்ந்தவர் கோதண்டன்(70). இவரது மனைவி பொன்னம்மாள். இவர்களுக்கு சிவசங்கர், வினித் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வினித்துக்கு பெண் பார்ப்பதற்காக இவர்கள் நான்கு பேர் மற்றும் கோதண்டனனின் தங்கை என 5 பேர் திருத்துறைப்பூண்டிக்கு காரில் சென்றுவிட்டு, அங்கிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது பெருங்குடி சுங்கச்சாவடி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த ஐந்து பேரும் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பரிசோதனை செய்ததில் கோதண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old man killed 4 injured in car overturned after hitting a road block in perungudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->