#பெரம்பலூர் : கலெக்டர் ஆபீசில் முதியவர் செய்த செயலால் பரபரப்பு.!
Old men Trying To Firing himself in Perambalur collector Office
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் வட்டம் தேனி கிராமத்தில் சரவணன் என்பவர் விவசாய வேலை செய்து குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது விவசாய நிலத்தை யாரோ அபகரிப்பு செய்வது பற்றி அவர் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளார்.
![](https://img.seithipunal.com/media/perambalur 2023.jpeg)
இந்த புகார் பற்றி அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனது நிலத்தை மீட்க சரவணன். பல்வேறு முயற்சிகளை எடுத்தும் எந்த பலனும் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து, ஒரு அதிர்ச்சி முடிவுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சரவணன் அங்கே மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.
இதை கண்ட போலீசார் சரவணனை மீட்டு தீக்குளிப்பதிலிருந்து தடுத்துள்ளனர். மேலும், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Old men Trying To Firing himself in Perambalur collector Office