இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு
Old woman killed in twowheeler collision
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகன மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல்கோணம் கீழ மணியன்குழியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார். இவரது மனைவி ஷர்மிளா (55). இவர் சம்பவத்தன்று இரவு தனது சகோதரனுடன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று ஷர்மிளா மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த ஷர்மிளாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஷர்மிளா பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து ஷர்மிளாவின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இரணியல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தை தேடி வருகின்றனர்.
English Summary
Old woman killed in twowheeler collision