#தமிழகம் || கஞ்சா செடி வளர்த்தெடுத்த தாத்தா கைது.!
oldman arrested for growing cannabis
கொடைக்கானல், வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பழனி அருகே உள்ள கோம்பை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கொடைக்கானல் காவல்துறையினர் நேரடியாக அந்த பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டி (வயது 65) என்பவர் தோட்டப் பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வருவதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதன் பின்னர், அவர் தோட்ட பகுதியில் வளர்த்து வந்த கஞ்சா செடிகளை காவல்துறையினர் முற்றிலும் அழித்து அப்புறப்படுத்தினர்.
மேலும், கைது செய்யப்பட்ட பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விரசனை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
oldman arrested for growing cannabis