கோவை :: சமையல் சிலிண்டர் வெடித்து விபத்து - முதியவர் படுகாயம் - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் முதியவர் பலத்த காயமடைந்துள்ளார்.

கோவை மாவட்டம் ஆழியாறு அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் தினகரன்(67). இவர் நேற்று முன்தின இரவு மெழுகுவர்த்தி பற்ற வைத்துள்ளார். அப்பொழுது கியாஸ் கசிவு காரணமாக வீட்டிலிருந்த சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்த நிலையில், தினகரன் பலத்த தீ காயமடைந்தார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ஆழியாறு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பலத்த காயமடைந்த தினகரனை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்பு அங்கிருந்து தினகரன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oldman injured in cooking gas cylinder blast in kovai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->