வெம்பக்கோட்டை அகழாய்வு - பெண்கள் அணிந்த ஆபரணம் கண்டெடுப்பு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அருகே தொல்லியல் துறை சார்பில் விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

அந்தக் குழிகளில் ஏராளமான சங்கு வளையல்கள், சுடுமண் பொம்மைகள், செப்புக்காசுகள், வேட்டைக்கு பயன்படுத்திய பழங்கால கருவிகள் உள்பட 2,700-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், அகழாய்வில் பெண்கள் அணியக்கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆபரணம் நேற்று கண்டெடுக்கப்பட்டது. மேலும், நீல நிற கண்ணாடி மணியும் கிடைத்தது. 

இது தொடர்பாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்ததாவது:- "வேலைபாடுகளுடன் கூடிய ஆபரணங்கள் செய்ய முற்காலத்தில் இது போன்ற மணிகளை பயன்படுத்தி இருக்கலாம் என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

omens arnaments found in vembakottai escavation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->