தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க எண்! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த சிறப்பு பேருந்து சேவைகள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு 9445014436 என்ற எண்ணில் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 
18004256151, 
04424749002, 
04426280445, 
04426281611
ஆகிய எண்களில் பயணிகள் புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், அக்.28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 14,016 பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், சென்னையில் இருந்து 11,176 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

கடந்தாண்டு 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோருக்காக 9,441 பஸ்கள் இயக்கப்படும். தீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து மட்டும் 5 லட்சத்து 83 ஆயிரம் பேர் பயணிப்பார்கள் என்றும் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Omni Bus Ticket Hike Complaint Number


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->