ஓணம் பண்டிகை.. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!
Onam festival august 29 holiday to kanniyakumari district
ஓணம் இந்தியாவின் தென் தமிழக பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும். அதிலும் குறிப்பாக கேரளாவில் பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரளாவில் ஓணம் முக்கிய பண்டிகை என்பதால் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் ஒரு சில குறிப்பிட்ட மாவட்டங்களில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஓணம் பண்டிகையையொட்டி கடந்த ஆண்டு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் நடப்பாண்டில் ஓணம் பண்டிகையையொட்டி வரும் ஆகஸ்ட் 29ம் தேதி சென்னை, கோவை, நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும், ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஓணம் பண்டிகை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 23ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Onam festival august 29 holiday to kanniyakumari district