#தேனி || அரிக்கொம்பன் யானை தாக்கியதில் ஒருவர் பலி..! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் விடப்பட்ட அரிக்கொம்பன் காட்டு யானை கடந்த 27-ந்தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்தது. இதையடுத்து 'அரிக்கொம்பன்' காட்டு யானை பால்ராஜ் என்பவரை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த பால்ராஜ் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பால்ராஜ், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இதுவரை 18 பேரை கொன்ற கம்பத்தில் அரிக்கொம்பன் யானை கம்பம் பகுதியில் நடமாடும் நிலையில், மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அரிக்கொம்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One killed in Arikomban elephant attack in theni


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->