மருத்துவக் கழிவுகளை குப்பையில் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு 1 லட்சம் அபராதம்.!
one lakh fine to private hospital for medical wastege dumping in chennai
மருத்துவக் கழிவுகளை குப்பையில் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு 1 லட்சம் அபராதம்.!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகளை முறைப்படிப் பாய்லர் மூலம் அழிக்காமல் குப்பையில் வீசுவதாகப் புகார் எழுந்தது.
இந்த புகாரையடுத்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தீவிரமாகக் கண்காணிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன் படி மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் போது, ராஜகீழ்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளைக் குப்பைகளில் வீசுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அதிகாரிகள் நேரில் பார்த்ததுடன் தகுந்த ஆதாரங்களைத் திரட்டியதால் சம்பந்தபட்ட மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுபோன்று பொதுச் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு முதலில் அபராதமும் தொடர்ச்சியாக ஈடுபட்டால் கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
one lakh fine to private hospital for medical wastege dumping in chennai