சபரிமலை : இரண்டே நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி முதல் நடை திறக்கப்பட்டது. 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இந்த ஆண்டு மிக பிரம்மாண்டமாக நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு போன்றவற்றின் மூலம் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதைத்தொடர்ந்து ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் சரியான நேரத்திற்கு வந்தால் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  

இருப்பினும், கூட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் சூழ்நிலை தான் நிலவி வருகிறது. இதனால், பக்தர்களின் வசதிக்காக கோவில் நடை திறப்பு நேரத்திலும் தேவஸ்தானம் மாற்றம் செய்துள்ளது. 

அதாவது, வழக்கமாக அதிகாலை நான்கு மணிக்கு திறக்கப்பட்டு வந்த நடை, தற்போது மூன்று  மணிக்கே திறக்கப்படுகிறது. அதேபோல் மாலையிலும் நடை மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல், வழக்கமான நாட்களை விட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் மட்டும் சபரிமலையில் தரிசனத்திற்காக 87 ஆயிரத்து 491 பேர் முன்பதிவு செய்திருந்தனர். 

அவர்களில் 85 ஆயிரம் பேர் ஒரே நாளில் தரிசனம் செய்தனர். அதன் படி, நேற்றும் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இருந்தது. வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்கின்றனர்.

அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். அவர்களின் வசதிக்காக தேவசம்போர்டு கண்காணிப்புக் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. 

பக்தர்களுக்காக கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் நியாயமான விலையில் விற்கப்படுகிறதா? தரமாக உள்ளதா? என்று அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், காட்டுப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கு தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one lakhs peoples dharsasanam in sabarimala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->