#சேலம் || சயனைடு கலந்த மதுவால்‌ ஒருவர் உயிரிழப்பு.!! வெளியான அதிர்ச்சி பின்னணி.!! - Seithipunal
Seithipunal


சயனைடு கலந்த மது அருந்திய ஒருவர் உயிரிழப்பு.!!

சேலத்தில் தற்கொலை செய்து கொள்வதற்காக அண்ணன் மதுவில் சயனைடு கலந்து வைத்திருந்த நிலையில் மவை தம்பி எடுத்துச் சென்று நண்பருடன் சேர்ந்து குடித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் நண்பர் உயிரிழந்த நிலையில், தம்பி உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மக்கான் தெரு பகுதியை சேர்ந்த சதாம் தனது நண்பருடன் சேர்ந்து நேற்று மாலை சேலம் முள்வாடி கேட் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்துள்ளனர். அப்போது இருவரும் மதுபான பாரில் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் இருவரும் சயனை கலந்த மது அருந்து தெரிய வந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவர்களில் நண்பர் ஆசீர் உயிரிழந்துள்ளார்.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சேலம் டவுன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொள்வதற்காக சதாமின் அண்ணன் மதுவில் சயனைடு கலந்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One person died after take cyanide mixed alcohol


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->