தொடர் மழையின் காரணமாக மீண்டும் சதம் அடித்த வெங்காய விலை! கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள்! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கோவை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. தினசரி 10 வாகனங்களில் சின்ன வெங்காயம் விற்பனைக்காக வருவது வழக்கம். ஆனால் கடந்த ஒரு மாத காலமாக தினசரி இரண்டு வாகனங்களை மட்டுமே சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. 

இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் மொத்த விற்பனை விலை ரூ.90 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று வெளி சந்தைகளான காய்கறி கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சாம்பாருக்கு வெங்காயம் வாங்கும் போது இல்லத்தரசிகள் கண்ணீர் வடிக்கின்றனர். 

சின்ன வெங்காயம் உற்பத்தி செய்ய கிலோவுக்கு ரூ.20 வரை செலவாகும் நிலையில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இதனால் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிர் இடுவதை நிறுத்தி விட்டனர். அதன் காரணமாக வரத்து குறைந்து தற்பொழுது விலை ஏற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Onion price hike due to continuous rain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->