#Breaking: புதன்கிழமை துவங்கும் ஆன்லைன் வகுப்புகள்.! அதிரடியாக வெளியான அறிவிப்பு.!
Online class starts on kallakurichi sakthi school that reason For student death
கள்ளக்குறிச்சி கணியமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 17ஆம் தேதி பள்ளி பேருந்துகள் மற்றும் பள்ளி கட்டிடங்களை அடித்து உடைத்து பலர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பள்ளிகள் சேதமடைந்து இருக்கிறது. மேலும் அந்த பள்ளி மீது குற்றச்சாட்டு இருப்பதால் பள்ளி தொடர்ந்து இயங்குமா என்பதே கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில், இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வரும் புதன் கிழமையிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மேலும், 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அடுத்த வாரத்திலிருந்து வகுப்புகள் துவங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Online class starts on kallakurichi sakthi school that reason For student death