குஜராத் டூ மதுரை வந்து மாணவி.."ஆன்லைன் நண்பர்களிடம் உதவி கேட்டக".. மயக்க மருந்து கலந்து பலாத்காரம்..!! - Seithipunal
Seithipunal


குஜராத்திலிருந்து கருத்தரங்கில் கலந்து கொள்ள மதுரை வந்த மாணவிக்கு உதவி செய்வதாக கூறி அவரை இளைஞர்கள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைனில் சாட்டர்டு அக்கவுன்ட் படித்து வந்துள்ளார். இவர் தனது படிப்பு தொடர்பாக கடந்த ஆண்டு  மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட நிலையில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். அப்போது அந்த மாணவி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ஆன்லைன் படிப்பின் போது பழக்கமான சென்னையை சேர்ந்த அஷீஷ் ஜெயின் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜெரோம் கதிரவன் ஆகியோர் உதவ சென்றுள்ளனர்.

அப்போது மாணவிக்கு வாங்கி வந்த உணவில் மயக்க மருந்து கலந்த இருவரும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு குஜராத் சென்ற மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியிடந்த மாணவியின் பெற்றோர் ஆன்லைன் வழியாக மதுரை மாவட்ட காவல் துறைக்கு புகாரளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அஷீஷ் ஜெயின், ஜெரோம் கதிரவனை ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Online friends rape girl who asked for help in Madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->