ஆன்லைன் விளையாட்டை கண்காணிக்க ஆணையம் - சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியீடு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில்  வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், இன்றே தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் என்று சட்டப்பேரவையில் நேற்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மசோதா ஆளுநர் ஒப்புதல் காரணமாக சட்டமாக மாறி உள்ளது. அது தற்போது தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்கு படுத்துவது தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட உள்ளது.

தலைமைச் செயலாளர் பதவிக்கு குறையாத பதவி வகித்து ஓய்வு பெற்றவர் ஆணையத்தின் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஐஜி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர் இந்த ஆணையத்தின் உறுப்பினராக இருப்பர்.

இந்த ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரும், விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினராக இருப்பார். 

ஆன்லைன் விளையாட்டை வழங்குவோரை ஆணையம் கண்காணிக்கும், அவர்களைப் பற்றிய தரவுகளை பராமரிக்கும். 

மேலும் ஆன்லைன் விளையாட்டை அளிப்பவர்கள் மீதான புகாரை இந்த விளையாட்டு ஆணையம் தீர்த்து வைக்கும் என்று தெரிய வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Online Gambling law and committee TNGovt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->