தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்கும் முயற்சி.! மரக்கன்றுகளை இணையதளம் வாயிலாக பெற்றுக்கொள்ள தமிழக அரசு ஏற்பாடு.! - Seithipunal
Seithipunal


பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இணைய தளம் வாயிலாக மரக்கன்றுகளை பொதுமக்கள் எளிதாக பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழகத்தில் வனப்பரப்பை அதிகப்படுத்தி பசுமை போர்வையை விரிவுபடுத்தும் வகையில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 24/9/2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வனம் மற்றும் பசுமை பரப்பினை 33 சதவீதமாக உயர்த்துவதனை முக்கிய நோக்கமாக கொண்டு இவ்வியகம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மரம் வளர்ப்பிற்கு ஊக்குவித்தல் இவ்வியக்கத்தின் நோக்கமாகும்.

அதன் அடிப்படையில் வேளாண் பெருமக்கள், தொழில் நிறுவனங்கள், மக்கள் நல சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தனி நபர்கள் மரக்கன்றுகளை எளிதாக பெயரும் பொருட்டு பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் இணையதள முகவரியில் (www.greentnmission.com) பயன்பாட்டாளர்கள் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து, தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

வேளாண் பெருமக்கள், மரக்கன்றுகளை நடுவதற்கு தங்களுக்கு சொந்தமான நிலங்கள் பற்றிய விவரங்களுடன் தங்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை இணையதளம் மூலமாகவோ அல்லது கடிதத்தின் வாயிலாக இயக்குநர் பசுமை தமிழ்நாடு இயக்கம், பனகல் மாளிகை, 8வது தளம், சைதாப்பேட்டை, சென்னை-600015 என்கின்ற முகவரிக்கு அனுப்பி வைத்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் பெற 18005997634 என்கிற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Online Plants sale by TN Govt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->