ஒப்புதல் அளிக்கவில்லை! இன்னும் பரிசீலனையில் தான் உள்ளது! - ஆளுநர் ஆர்.என் ரவி விளக்கம்!
online rummy band law Not approved by Governor RN Ravi
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கடந்த அக்டோபர்19ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் பெருந்தொகையை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புகார் எழுந்தது அடுத்து தமிழ்நாட்டில் தடை செய்ய மாநில அரசு முடிவு செய்தது. இதனை அடுத்து உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்ய உத்திரவிடப்பட்டது.
இதனை அடுத்து நீதிபதி சந்துரு குழு கடந்த ஜூன் 27ஆம் தேதி 71 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளிக்க முடிவு செய்தது.
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் விளக்கம்!
இந்த நிலையில் பல்வேறு ஊடகங்களில் ஆன்லைன் சூதாட்ட அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இதனை ஆளுநர் ரவி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது "மாநில சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்ட மசோதா முறையான மசோதாவாக தாக்கல் செய்ய அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு நான் ஒப்புதல் அளித்திருந்தேன். ஏனென்றால் இது போன்ற நடவடிக்கைகளை மாநில ஆளுநராக நான் தடுக்கக்கூடாது.
தற்பொழுது அந்த மசோதா முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு எனது ஒப்புதலுக்காக சட்டப்பேரவை மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மசோதாவில் உள்ள அம்சங்கள் மற்றும் பிற சட்ட நிலவரங்கள் தொடர்பாக நான் பரிசீலித்து வருகிறேன். இதனால் நான் இன்னும் ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை" என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
English Summary
online rummy band law Not approved by Governor RN Ravi