சேலம் | ஆன்லைன் மூலம் சேலைகளை விற்று ரூ.30 லட்சம் மோசடி செய்தவர்கள் கைது! - Seithipunal
Seithipunal


இளம்பிள்ளையில் ஆன்லைன் மூலம் சேலைகள் விற்று ரூ.30 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்:

சேலம் அருகே உள்ள இளம்பிள்ளை சவுடேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சுபா (வயது 33). இவர் அதே பகுதியில் துணி கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.

இவரது கடையில், ஆன்லைன் மூலமும் சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதால், இந்த பிரிவில் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் உமா மகேஸ்வரி வேலை பார்த்து வந்துள்ளார். 

இதில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சுபா ஆன்லைன் மூலமாகவும் மற்றும் இவரது கணவரின் சகோதரர் அருண் என்பவர் கடைகளில் இருந்தும் சேலைகளை விற்றுள்ளனர். 

விற்ற சேலைகளின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் பணத்தை உமா மகேஸ்வரி தனது சகோதரர் மாணிக்கம் வங்கி கணக்கிலும், மும்பையில் உள்ள நண்பர் உமா பிள்ளை என்பவரது கூகுள் பே கணக்கிலும் பெற்று சுபாவை மோசடி செய்துள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த சுபா சேலம் மாவட்ட காவல் நிலையத்திற்கு சென்று எஸ்.பி. சிவகுமாரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். 

அதன் பேரில் இன்று காலை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் மற்றும் சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, உமா மகேஸ்வரி, மாணிக்கம், உமா பிள்ளை ஆகியோரை கைது அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

online selling sarees 30lakh fraud


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->