ஊர்காத்த மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா..பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
Oorkatha Mariamman Temple Chithirai Festival Devotees descend to the flower pit and pay obeisance
ஆண்டிபட்டி நகர்பகுதி ஊர்காத்த மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகர் பகுதிக்குட்பட்ட பாப்பம்மாள்புரம் பகுதியில் அமைந்துள்ள பழமையான ஊர்காத்த மாரியம்மன் கோவில்.இந்த ஊர்காத்த மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.அப்போது சித்திரை திருவிழாவை முன்னிட்டு சித்திரை முதல் நாளில் இருந்து காப்புக்கட்டி விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திவருகின்றனர்.அந்தவகையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடைபெறுவருகிறது.
இந்த சித்திரை திருவிழாவை முன்னிட்டு சித்திரை முதல் நாளில் இருந்து காப்புக்கட்டி விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது .
அப்போது அக்னி சட்டி எடுத்து ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்த பக்தர்கள் கைகளில் அக்னி சட்டி ஏந்தியும், வாயில் அலகு குத்தியும் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நகர் பகுதி முழுவதிலும் இருந்து வந்திருந்து திரளான பக்தர்கள் இந்த விழாவினை கண்டு அம்மனை வழிபட்டனர்.இதையடுத்து ஊர்காத்த மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
English Summary
Oorkatha Mariamman Temple Chithirai Festival Devotees descend to the flower pit and pay obeisance