எதிர்க்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில் திமுக வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!
Opposition leaders join DMK in presence of Leader of Opposition Siva
காலாப்பட்டு தொகுதியைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் தங்களை திமுக இணைத்துக் கொண்டனர்.
புதுச்சேரியில் 2019 சட்டமன்ற தேர்தலில் என் ஆர் காங்கிரஸ்,பாஜக கூட்டணி போட்டிபோட்டு ஆட்சியை கைப்பற்றியது.இந்த தேர்தலில் காங்கிரசை பின்னுக்கு தள்ளி திமுக எதிர்க்கட்சி வரிசையில் தற்போது அமர்ந்துள்ளது.இதையடுத்து சமீபகாலமாக புதுச்சேரியில் திமுக பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்ததுடன்,கட்சியை தொண்டர்கள் பலப்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் காலாப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட பிள்ளைச்சாவடி பிரபாகரன் என்கிற பிரவீன் என்பவர் தலைமையில் லோகேஷ், வெங்கட், கார்த்தி, மகேஷ், பிரகாஷ், ராகுல், கிரன், அசோக், பாலாஜி, சுனில், ஜெகதீஷ், ஹரிகிருஷ்ணன், விநாயக், வெங்கட்ராமன் உள்ளிட்ட 100 இளைஞர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் தங்களை திமுக–வில் இணைத்துக் கொண்டனர்.
திமுக–வில் இணைந்த இளைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் கழக உறுப்பினர் படிவம் கொடுத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., காலாப்பட்டு தொகுதி செயலாளர் சத்தியவேல், தொகுதி துணைச் செயலாளர் நடராஜன், முன்னாள் நெசவாளர் அணி துணை அமைப்பாளர் தங்கராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், வேலவன், தொகுதி செயலாளர்கள் நடராஜன், சக்திவேல், வடிவேல், தியாகராஜன், துணை அமைப்பாளர் யோகேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
English Summary
Opposition leaders join DMK in presence of Leader of Opposition Siva